நாகை அடுத்த தலைஞாயிறில் புதிய பொது சுகாதார மையம் கட்டுவதற்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் பங்கேற்று துவக்கி வைத்தார்
நாகை ஜூன் 4
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைனை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் முன்னிலை வகித்தார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூபாய் 28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கோடியக்கரை ஊராட்சியில் ரூபாய் 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூபாய் 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்களை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து மேலும் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சய்ராஜ், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமார், தலைஞாயிறு ஒன்றிய குழுத் தலைவர் தமிழரசி, தலைஞாயிறு செயல் அலுவலர் குகன், மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் கோடியக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்,?துணைத்தலைவர் குமார், வேதாரண்யம், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

