நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை ஜூன் 2
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளுர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி இருந்தார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஐநல்லூர் ஊராட்சி சவேரியார் கோவில் சுனாமி குடியிருப்பு பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில் செல்லூர், ஆவராணி, வடுகச்சேரி ஆகிய ஊராட்சி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், அந்தணபேட்டை ஊராட்சியில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணிகளையும், சிங்கநெரிதோட்டதில் ரூ.8.87 லட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் இருக்கை ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், நூலகம் கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட பணியினையும், இரிஞ்யூர் அங்காடி கட்டிடம் கட்டும் பணியினையும், அனக்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர்வாரும் பணியினையும், புதிய அங்காடி கட்டும் பணியினையும், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், 75 அணக்குடி, வலிவலம் புதிய அமுதகுளம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
பின்பு கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தேவநதியில் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணியினையும், ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ஆகிய கட்டிடத்தின் அருகில் சமுதாய உறுஞ்சிகுழி பணியினையும், சமத்துவபுரத்தில் பழுது அடைந்த வீடுகளையும் பார்வையிட்டார். மேலும் பாலகுறிச்சி ஊராட்சி ஓட்டதட்டை கிராமத்தில் புதிய அமுதகுளம் அமைக்கும் பணிகளையும், சோழவித்தியபுரம், தண்ணீலாபடி ஆகிய கிராமத்தில் புதியஅங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நத்தபள்ளம் கிராமத்தில் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், பள்ளியமூலை, வெள்ளப்பள்ளம் ஆகிய பகுதியில் புதிய அமுதகுளம் அமைக்கும் பணிகளையும் நீர்முளை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், துளசாபுரம் ஊராட்சியில் அங்காடி கட்டிடம் மற்றும் உணவு தாணிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பசுபதி, பேபி, உதவி செயற்பொறியாளர், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ராஜாராமன், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியகராஜன், ராஜகோபால், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி, தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

