நாகை மாவட்டம், திருமுருகல் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு
நாகை ஜூன் 2
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியினையும், ரூ.10.37 லட்சம் மதிப்பீட்டில் நரிமணம் பாசனவாய்க்கால் தூர்வாரும் பணியினையும், ரூ.13,500 மதிப்பீட்டில் சமுதாய உறிஞ்சிக் குழி அமைக்கும் பணியினையும், கீழபூதனூர் கிராமத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணியினையும், தலா ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் கீழபூதனுர் மற்றும் பில்லாளி ஊராட்சியில் புதிய நேரடி கொள்முதல் நிலையம் கட்டுமான பணியினையும், பில்லாளி ஊராட்சியில் ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணியினையும், கோட்டூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்காடி கட்டிடம் கட்டுமான பணியினையும், ஏனங்குடி ஊராட்சியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணியினையும், திருப்புகலூர் ஊராட்சியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைகுட்டை அமைக்கும் பணியினையும், ரூ.6.62 இலட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் போலகம் ஊராட்சியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணியினையும், ரூ.7.33 லட்சம் மதிப்பீட்டில் அமுதகுளம் அமைக்கும் பணியினையும், ரூ.11.62 லட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், ஏர்வாடி ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியினையும், அம்பல் மற்றும் வடகரை ஊராட்சியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.


ஆய்வின் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பசுபதி, உதவிசெயற்பொறியாளர் பேபி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திஆரோக்கியமேரி, பாலமுருகன், உதவிபொறியாளர்கள் செந்தில்குமார், சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

