வேதாரண்யத்தில் சார்பதிவாளர் அலுவலக வருவாய் கிராமங்களின்வருவாய் வட்டங்கள் சீரமைத்தல் தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கூட்டம்.
வேதாரணியம் ஜுன் 1
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சி எல்லை சீரமைப்பு தொடர்பாக சார்பதிவாளர் அலுவலக வருவாய் கிராமங்களின் வருவாய் வட்டங்கள் அடிப்படையில் சீரமைத்தல் பொது மக்களின் கருத்து கேட்பு கூட்டம் 1.6.2022 வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.சார் பதிவக வழிகாட்டி கிராமங்கள் வெள்ளப்பள்ளம், கோயில்பத்து, பிரிஞ்சு மூலை, திருமாளம்,ஈசனூர் மீனம்ப நல்லூர், வாழக்கரை மற்றும் தலைஞாயிறு 1 ஆம் சேத்தி முதல் 5ஆம் சேத்தி வரை மற்றும் தலைஞாயிறு அக்ராஹாரம் கிராமங்கள் ஆகிய 13 கிராமங்கள் தகட்டூர் மற்றும் திருக்குவளை சார்பதிவகத்தில் சேர்வதற்காக வேதாரண்யம் மற்றும் திருக்குவளை வட்டத்தைப் பொறுத்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் கோட்டாட்சியர் துரைமுருகன் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் O.S. மணியன்
நாகை திமுக மாவட்ட செயலாளர் என் கௌதமன்,
வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி,தலைஞாயிறு பேரூராட்சி மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகா குமார்
நாகை மாவட்ட பதிவாளர் ஜனார்த்தனன்,வேதாரணியம் சார்பதிவாளர் கீதா,
முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது பயன்பாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இயங்க வேண்டும் எனவும் ஒருமனதாக வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகனிடம் தெரிவித்தனர் பொதுமக்களின் கருத்துக்களை அரசிடம் கொண்டு சென்று சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்.

