நாகை மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாகை மே 31
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம், கல்லார் வடிகாலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சா் பன்னீர்செல்வம், உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகத் தலைவர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், கருவேலங்கடை-கல்லார் கிராமத்தில் கல்லார் வடிகாலில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ தூரம் தூர்வாரப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கல்லார் கிராமத்தில் மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நாகை மாவட்ட ஆட்சித் தலைவா் டாக்டர் அருண்தம்புராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயா் அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

