தூத்துக்குடியில்
பசுமையை உருவாக்க
மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
தூத்துக்குடி, ஜூன்,1
தூத்துக்குடி சுற்றுப்புற சூழலை பேணி பாதுகாத்து மாசு இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். பசுமையை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு பகுதிகளில் மரக்கன்று நடுவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி தூத்துக்குடி மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமி 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போல்பேட்டை கிழக்கு பகுதியில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், அரசு வழக்கறிஞர் மாலாதேவி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க தலைவர் மருதப்பெருமாள், மாநகர சிறுபான்மை பிரிவு அணி செயலாளர் சாத்ராக், மகேஸ்வரசிங், ஜெயராஜ், முருகன், விக்னேஷ், ஜெயபால், மாரி, செந்தில், முத்துராஜ், இசக்கிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டச்செயலாளர் நாராயணன், வேல்பாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

