தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் அடுத்த சாதனை இலக்கு ஸ்போக்கன் ஆங்கிலம், ஹிந்தி பயிற்சி துவக்கம்!!
கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து தகவல்!
.
தூத்துக்குடி, ஜூன்,1
தூத்துக்குடியில் கின்ஸ் அகாடமி கடந்த 5 ஆண்டுகளாக போலீஸ், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. அரசு போட்டித் தேர்வுகள் எழுதும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியரும் தங்கள் சொந்த ஊரில் இருந்து கொண்டே படித்து தேர்வு பெறும் வகையில் கின்ஸ் அகாடமி ஒரு இலவச இணையதள சேவையை துவங்கி இருக்கிறது. www.khinsacademy.com என்ற கட்டணமில்லா இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் எழுதலாம். அவர்கள் எழுதிய தேர்வுகள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணும், சரியான விடைகளும், தேர்வர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். என்ற முறை அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்து வருகிறது .
இதுபோல ஆண்டுதோறும் பல மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர் இந்த அகாடமியில் பல்வேறு சிறப்பம்சங்கள் மிகுந்த பயிற்சிகள் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு கலங்கரை விளக்காக செயல்படும் இந்த அகடாமி மற்றொரு முயற்சியாக
ஸ்போக்கன் ஆங்கிலம், ஹிந்தி பயிற்சி முற்றிலும் இலவசமான இந்த பயிற்சியை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து
தூத்துக்குடி கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போல்பேட்டையில் இயங்கிவரும் கின்ஸ் அகாடமியில் ஸ்போக்கன் ஆங்கிலம் ஹிந்தி பயிற்சி முற்றிலும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சேர்க்கை துவங்கிய உடனே இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதன் துவக்க விழாவிற்கு கின்ஸ் அகாடமி பயிற்சியாளர் சிவகுருநாதன் தலைமை வகித்தார்.
கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து வரவேற்று பேசுகையில் தமிழக மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்றுக்கொள்வது மிகவும் நல்லது மற்ற மாநிலங்களோடு ஓப்பிடும போது தமிழக மாணவர்கள் இதில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள் ஆகவே தான் இந்த அகாடமியில் ஸ்போக்கன் இங்கிலிஷ் மற்றும் ஹிந்தி எழுத்துக்கள் கற்றுக்கொள்வதற்கான பயிற்சியை துவக்கியுள்ளோம். ஓரு மாத காலம் தொடர்ந்து பயிற்சி நடக்கும் ஆங்கிலமும் ஹிந்தியும் ஒன்றாகவே கற்றுக் கொடுக்கப்படுகிறது. தினமும் ஒன்றைமணி நேரம் வீதம் வகுப்புகள் நடைபெறுகின்றன. 15 நாட்கள் தொடர்ந்து வகுப்பில் கலந்து கொண்டால் மாணவர்கள் எளிதில் ஹிந்தி எழுத்துக்களையும் வார்த்தைகளையும் வாசிக்க முடியும்.

அது போல் அந்த 15நாட்களில் மாணவர்கள் ஆங்கிலம் பேச துவங்குவார்கள் இங்கு அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது என்பது கனவாகவே இருக்கிறது. இந்த ஓரு மாதத்தில் அந்த கனவினை நாம் நினைவாக்கி காட்ட முடியும் ஆங்கில வகுப்பிற்கு புத்தகம் பேனா தேவையில்லை. மாணவர்கள் வெறுமனே கவனித்து கொண்டிருந்தால் மட்டும் போதும் சில நாட்களிலேயே ஆங்கிலத்தில் உரையாட துவங்கலாம் அதற்காக சிறந்த முறையில் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு இங்கு பயிற்சி கொடுக்கிறோம் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது கல்லூரி மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் சொந்தமாக தொழில் செய்பவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர். வயதான முதியோர்கள் கூட இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இந்த அகாடமியில் ஏறக்கனவே ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎப்எஸ் போன்ற அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. என்பது குறிப்பிடதக்கதாகும். அகாடமி மாணவி பிருந்தா நன்றி கூறினார். மேற்கண்ட இத்தகவலை கின்ஸ் அகாடமி இயக்குநர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்

