வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கான்புலத்தில் மருத்துவ படிப்பை தொடர முடியாத மருத்துவ மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரணியம் மே 30
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மாற்றுத்திறனாளியான இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவரது மனைவி பெயர் பார்வதி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கிருத்திகா என்ற மகள் அரசு பள்ளியில் படித்து 12ஆம் வகுப்பு தேர்வில் 1050 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் இவரது தோழிகள் சிலர் குறைந்த செலவில் ரஷ்யாவில் டாக்டர் படிப்பை படிக்கலாம்
என்ற ஆர்வத்தை தூண்டிய தன் பேரில் கிருஷ்ணமூர்த்தியும் தனது சக்திக்கு மீறி ஆசைப்பட்டு தனது மகள் கிருத்திகாவை 2017இல் ரஷ்யாவில் மருத்துவம் படிக்க தனது வீட்டை விற்று அந்த பணத்தில் சீட்டு வாங்கி
ரஷ்யாவில் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்தார்.
இரண்டு ஆண்டுகள் கிருஷ்ணமூர்த்தியும் அக்கம் பக்கத்தில் உள்ள அவர்களின் உதவியால் தனது மகளை படிக்க வைத்தார்.
இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு அவரால் பணம் கட்ட முடியவில்லை பல்வேறு தரப்பிலும் உதவி கேட்டவருக்கு தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மருத்துவ மாணவி கிருத்திகா மற்ற தோழிகள் கல்வியை தொடரும் போது தான் மட்டும் வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியவில்லையே என்று அருகில் உள்ள விஷ செடியான அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு வேதாரணியம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

