நாகப்பட்டினம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
நாகப்பட்டினம் மே 30
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று (30.05.2022) நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை,குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்விஉதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துமொத்தம் 148மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் வடகரை ஊராட்சியைச் சேர்ந்த திருமதி விஜயலெட்சுமி என்பவரின் மகள் கௌதமி என்பவர் முடிகொண்டான் ஆற்றில்; மண் இடிந்து விழுந்து உயிரிழந்தமைக்காக அவரது தாயாருக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.50,000/-க்கான காசோலையினையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அடையாள அட்டையினையும், 4 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையினையும், மேலும், திருக்குவளை மற்றும் வேதாரண்யம் வட்டத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.மனோகரன் ஆகியோர் அளித்த மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூகபாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்திமக்கள் தொடர்புஅலுவலர் மு.தனபால் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் வ.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்பு
டாக்டர். எல்வீஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

