வேதாரண்யம் அருகே பைக்-லாரி மோதிய விபத்து- ஒருவர் காயம் .
வேதாரணியம் மே 27
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு
ஊராட்சிக்குட்பட்ட தாதன்திருவாசல் பகுதியில் லாரியும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த
நாகப்பன் மகன் சிவசண்முகம் ( வயது 70) இருசக்கர வாகனத்தில் வரும் போது
வேதாரணியம் நோக்கி மணல் ஏற்றிவந்த லாரியில் மோதி பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர்.

