வேதாரண்யத்தில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் சி ராஜம் அவர்களின் 82வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
வேதாரணியம் மே 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம் பள்ளியில் முன்னாள் தொழிற்சங்க தலைவர் சி.ராஜம் அவர் மறைவிற்குபின் வந்த முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .அகஸ்தியம்பள்ளி காந்தி உதவி துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில்
முதலில் அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்வில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு ரூபாய் 3000 பெறுபவர் கதிர் அண்டர்காடு இரண்டாம் பரிசு பெறுபவர் ரூபாய் 2000 ராகுல் அகஸ்தியம்பள்ளி மூன்றாம் பரிசு ரூபாய் 1500 பெறுபவர் பிரவீன் அகஸ்தியம்பள்ளி நான்காம் பரிசு ரூபாய் 1000 பெறுபவர் ஹரிநாத்
துளசியாப்பட்டினம்
வெற்றி பெற்றவர்களுக்கு பாலசுப்பிரமணியம், ரமணி பரிசுகள் வழங்கினார்கள்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

