வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஆசிரியர் செல்வகுமாருக்கு வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வேதாரணியம் மே 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆசிரியர் செல்வகுமார் வானிலை பேரறிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது .
தோப்புத்துறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒரு முகமதியர் இல்ல திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது மணமகன் தன்வீர் அகமது மணமகள் பாத்திமா க்கும் நடைபெற்ற திருமண நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமீம் அன்சாரி, தனியரசு ,நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர் .இந்த நிகழ்வில் பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் ஆசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு அவரது சேவையை பாராட்டி வானிலை பேரறிஞர் என்ற விருது வழங்கப்பட்டது. கஜா புயல் வீசிய தருணத்தில் சரியான முறையில் புயலின் தாக்கத்தை கணித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இதில் செல்வகுமார் அவர்கள் பெரிதும் பாராட்டு பெற்றார். அதை மதிக்கும் வகையில் இப்பகுதியில் கல்வி சுற்றுச்சூழல் நல்லிணக்கம் ஆகிய பணிகளில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி எம் எஸ் எஸ் சார்பில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதை மதிக்கும் வகையில் இப்பகுதியில் கல்வி சுற்றுச்சூழல் நல்லிணக்கம் ஆகிய பணிகளில் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கி வரும் முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) சார்பில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது .இந்த விருதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தனியரசு அவர்கள் ஆசிரியர் செல்வகுமாருக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்வில் கல்வி சேவகர் ஆரிபா, வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் கே வேதரத்தினம், வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி ,நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, பி.வி. கே .பிரபு ,
ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் , முன்னாள் ஜமாத் தலைவர் நவாஸ்தீன்,புயல் குமார்
உள்ளிட்டோரும் பங்கேற்று வாழ்த்துக்களை வழங்கினார்கள்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

