நாகை மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மே 25
நாகை மாவட்டம் கீழையூர், கீழ்வேளுர் மற்றும் நாகப்பட்டினம்; ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் அந்தனப்பேட்டை ஊராட்சியில் உள்ளபுத்தூர் வாய்க்கால், கல்லார் வடிகால், குறிச்சி பிரிவு வாய்க்கால், ஒட்டைதட்டை கிராமத்தில் உள்ள பொட்டைவாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் 17.5 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பாலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள கால்நடைமருந்தகம், கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் செம்பியன் மகாதேவி ஊராட்சியில் உள்ள குதிரை சேவகன் ஆறு,வேப்பஞ்சேரி நீடூர் கிராமத்தில் உள்ள பி4 மரவனார் வாய்க்கால் தூர்வாரப்படுவதையும், மோகனூர் ஊராட்சியில் புலவனூர் கிராமத்தில் புது வடிகால் வாய்க்கால் 1.5 கி.மீ தூரம், மோகனூர் வீரன் கோவில் வாய்க்கால், கூரத்தாங்குடி ஊராட்சியில் மாணலூர் வாய்க்கால் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் 12.5 கி.மீ தூரம் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டுஆய்வுசெய்தார்.
கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் 105 மாணலூர் ஊராட்சியில் உள்ள நியாய விலைகடையினையும், ஆதமங்கலம் ஊராட்சியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினையும், கிராம நிர்வாக அலுவலகத்தினையும், வலிவலம் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அறை, மருந்தகம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் ஆய்வு செய்தார்.
திருக்கரவாசல் கிராமத்தில் உள்ள கோவில்பத்து வாய்க்கால், வடக்காலத்தூர் ஊராட்சிபட்டமங்கலம் வாய்க்கால், ஆணைமங்கலம் ஊராட்சி ஓர்குடி வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் கமலகண்ணன், கோவிந்தராஜ், உதவி பொறியாளர்கள் சாக்ரட்டீஸ், செல்வகுமார் மற்றும் விவசாயிகள், அரசுஅலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

