வரும் 26ம் தேதி கலைஞரின் முரட்டு பக்தன் தூத்துக்குடி என்.பெரியசாமி அவர்களின் 5 வது நினைவு தினம்!!
அமைச்சர், மேயர், உட்பட அனைத்து தரப்பு மக்களும்
மலரஞ்சலி செலுத்துகிறார்கள்.
தூத்துக்குடி ,மே, 24
தூத்துக்குடி மாவட்ட திமுகவில் 25 வருடங்களுக்கு மேலாக கோலோச்சியிருந்தவர் கலைஞரின் முரட்டு பக்தன்
அனைவராலும்
அண்ணாச்சி என்று அன்போடு அழைக்கப்படும் என்.பெரியசாமி. திமுக தலைவர் மு.கருணாநிதியின் அன்பை பெற்றவர். ’என் பெரியசாமி’ அதாவது என்னுடைய பெரியசாமி என்று கலைஞரால் அழைக்கப்பட்டவர். இதற்கெல்லாம் மேலாக கலைஞரின் முரட்டுப்பக்தன் என்று பெயர் எடுத்தவர் அண்ணாச்சி பெரியசாமி. மாவட்ட அரசியலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைப்பதில் வல்லவராக திகழ்ந்தவர்.
தூத்துக்குடி எம்.எல்.ஏவாகவும், நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். அவரின் முயற்சியால், தூத்துக்குடி மாநகருக்கு மருத்துவக்கல்லூரி, கடல்சார் பயிற்சி பள்ளி. 3வது பைப் லைன் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம், பக்கிள் ஓடை சிரமைப்பு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு என ஏகப்பட்ட பணிகளுக்கு காரணமாக இருந்தவர் அண்ணாச்சி. அவர் மறைந்து வருகிற 26ம் தேதி 5வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் போல்பேட்டையில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. அதில் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுகவினர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தொடர்ந்து ஹோட்டல் கீதா அருகே உள்ள மைதானத்தில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் கீதாஜீவன், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்

