வேதாரண்யத்தில் சாய்பாபா சத்திய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம்
வேதாரணியம் மே 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பு சாய்பாபா கோவில் புதிதாக கட்டப்பட்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் பஜனையும் மங்கள ஆர்த்தி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். இந்த சத்திய சாயி சேவா சமிதி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் களாக சந்திரமௌலி மோகனா தம்பதியினர் சொந்தமாக இந்தக் கோயிலை கட்டி
இந்தக் கோயில் நிர்வாகத்தை செய்து வருகிறார்கள். இந்த சாய்பாபா கோயில் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த சேவையை செய்து வருகிறார்கள். இந்த சேவையின் ஒரு பகுதியாக. இன்று 22. 5 .2022 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறும் .


ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை இந்த இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறும்
என்றும்
இந்த இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாமில் வேதாரண்யத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மீனாட்சி இவர்களின் அன்பு மகள் டாக்டர் ஆர் அபிராமி எம்பிபிஎஸ் அவர்கள் இதில் மருத்துவ ஆலோசனைகளை கூறுவார்கள் என்றும் ஏழை எளியவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்படும் என்றும் இதில் வரும் நோயாளிகளுக்கு இலவச ரத்த பரிசோதனையை சீதா ரத்தப்பரிசோதனை நிலையத்தின் உரிமையாளர் நடராஜன் (இவர் சாய்பாபாவின் பக்தர்) இலவசமாக செய்வார் என்றும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரமவுலி மோகனா தம்பதியினர் தெரிவித்தனர். இந்த சேவைப் பணியில்
ரவிச்சந்திரன், நடராஜன் ,
வரதராஜன், நாகவள்ளி,
கீதா ஆகியோர் ஈடுபட்டனர்.
இன்று நடைபெற்ற இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாமில் 25 பேர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட டாக்டர் அபிராமி எம்பிபிஎஸ் அவர்களுக்கு துணையாக உக்ரேனில் மருத்துவப் படிப்பைப் படித்த செந்தில்நாதன், ஆர்த்தி ஆகியோர் உதவி செய்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

