நாகையில் தமிழ்நாடு அரசு தோ்வாணைய தொகுதி-2க்கான தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மே 21
நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி, வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள 27 தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் தொகுதி-2ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களில் 8,598 நபர்கள் தேர்வு எழுத பதிவு செய்தவர்கள். இன்று நடைபெற்ற தேர்வில் 2,485 ஆண் தேர்வர்களும், 4,822 பெண் தேர்வர்களும் என மொத்தம் 7,307 தேர்வர்கள் தேர்வு எமுதினார்கள். இத்தேர்வு சிறப்பாக நடைபெற 27 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 3 பறக்கும் படை அலுவலர்களும், 5 சுற்றுக்குழு அலுவலர்களும், 52 ஆய்வு அலுவலர்களும், 28 வீடியோகிராபர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தேர்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் தனித்தனியாக பாதுகாப்பு பணியில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுமையத்திற்கு வருகை தர ஏதுவாக எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்து என கூறிய மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் மாவட்டம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோனியர் மேல்நிலைப்பள்ளி, வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆய்வு செய்தார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

