முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸார்
மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி,மே,22
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரசார் ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி புதுக்கிராமம் ரோட்டில் அலங்கரிக்கபட்ட ராஜீவ்காந்தி அவர்களின்
திரு உருவ படத்திற்கு மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் மாலை அணிவித்து மலர் தூவி பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் அருள் மண்டல தலைவர்கள் சேகர் பிரபாகரன் செந்தூர்பாண்டி ஐசன்சில்வா வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நடேஷ்குமார் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன் அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எஸ். பி.ராஜன் மாநகர நிர்வாகிகள் அருணாசலம், குமாரமுருகேசன்,தனுஷ்,அந்தோனிகுரூஸ்,சண்முகசுந்தரம்,சின்னகாளை,மகாலிங்கம்,முத்துராஜ்,வாசிராஜன்,பொன்மாரி,சதீஷ்,புரூஸ்லி உள்பட காங்கிரஸார் பலர் கலந்து கொண்டனர்,
செய்தி தொகுப்பு
M. ஆத்தி முத்து

