• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

policeseithitv by policeseithitv
May 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

————————————

காளையார்கோயில்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவில் தனியார் ஓட்டலில் மாவட்டத் தலைவர் மலைராஜ் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரச் செயலாளர் ஆரோக்கிய பாஸ்கர் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் ஸ்டீபன் வரவேற்றார்.

மாவட்ட பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் சாத்தியம் இல்லாததையும் சாத்தியமாக்குவார்.

நிச்சயமாக தற்போது நடைமுறையிலுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்தார்.

தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டுவந்ததற்கும், ஆசிரியர்களுக்கானபொது மாறுதலை 100 சதவீதம் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வாக நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக ஒய்வு பெற்ற செங்குலம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பொன் சாந்தாரம் அவர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.

பின்னர் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ட தீர்மானம் பின்வருமாறு,

1) மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்றும், முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₹1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளதை வரவேற்றும், நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. 100 சதவீத ஒளிவு, மறைவற்ற கலந்தாய்வை வெளிப்படையாக நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தால் போராடி பெறப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதலை மீண்டும் இந்தாண்டு கொண்டு வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. நடுநிலைப் பள்ளிகளில் எந்தவித பதவி உயர்வு வாய்ப்புமின்றி பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் தி.அருள்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் செ.

ரமேஷ் , இராமநாதபுர மாவட்ட தலைவர் சோ.முருகேசன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எம்.ராஜாங்கம், திருச்சி மாவட்ட செயலாளர் க.உதுமான் அலிஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.

ஆரோக்கிய சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் உ.சுரேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் லூ.சி.இளங்கோ, மாவட்ட துணைச் செயலர் சமயதுரை, மாவட்ட அமைப்புச் செயலாளர் மாரியப்பன், காளையார்கோவில் வட்டாரச் செயலாளர் அலெக்சாண்டர் துரை, பொருளாளர் நாகலிங்கம், மாவட்ட மகளிரணி தலைவி விக்னேஸ்வரி, இராமநாதபுர மாவட்ட செயலாளர் லிங்கதுரை, பொருளாளர் முஜிபூர் ரகுமான்

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எம்.விநாயகம், அமைப்பு செயலாளர் மு.முத்துக்குமார்,செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா, உள்ளிட்ட மாநில, மாவட்ட, மற்றும் காளையார் கோவில், சாக்கோட்டை ,சிவகங்கை ,தேவகோட்டை, மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிறைவாக மாவட்ட பொருளாளர் ஆர்.கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Previous Post

நாகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி

Next Post

தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கம் கூட்டத்தில் முடிதிருத்துவோர் குடும்ப சூழல் கருதி அரசு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In