நாகையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
நாகை மே 20
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அரசுஅலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அகிம்சை, சகிப்பு தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும், மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும், நாம் உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

