தலைஞாயிறில் அதிமுக கூட்டம் .
வேதாரணியம் தலைஞாயிறு மே18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுகவின் கண்டன கூட்டம் மே 17 ல் நாகை மாவட்ட அதிமுக கழக செயலாளர் ஓ எஸ் மணியன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டக் கழகப் பொருளாளர்
இரா. சண்முக ராசு, ஒன்றிய செயலாளர்கள் அவை. ஆர் பாலசுப்பிரமணியன், தங்க.சௌரிராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ். செங்குட்டுவன் ,மாநில செயற்குழு உறுப்பினர்
இளவரசி தங்கராசு,பேரூர் கழக செயலாளர் டி.பிச்சையன் , தலைஞாயிறு பேரூராட்சி தலைவர்
செந்தமிழ்ச்செல்வி , பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் நாகை மாவட்ட கழக செயலாளரும், வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. எஸ். மணியன் சிறப்புரையாற்றினார்.
இந்த கண்டன கூட்டத்தில்
தலைஞாயிறு பேரூராட்சி 1,2,3 வார்டுக்கு உட்பட்ட அரிச்சந்திரா நதி வடக்குக் கரையில்
நடைபெற்றுவரும் பேவர் பிளாக் சாலையின் அவலநிலையை கண்டித்தும்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்ட பழைய ஆற்றங்கரை ,சிந்தாமணி,முனியன் கோயில் தெரு, குண்டூரான்வெளி, வண்டல் , ஜீவாநகர் பிரிஞ்சு மூளை போன்ற குக் கிராமங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும் ,
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கும் குடி நீரின் அளவில் அடிக்கடி குளறுபடி செய்வதை கண்டித்தும்,
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு அவ்வப்பொழுது பார்ட் பில் வழங்காமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும் ,
நள்ளிரவில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டின் அவலநிலையை கண்டித்தும்,
சொத்துவரி ஏற்றத்தை கண்டித்தும்
கண்டன உரையாற்றினார். இக் கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

