நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மே 18
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ஐவநல்லூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்குப் பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், செல்லூர் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் முனீஸ்வரன் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், ஆவராணி ஊராட்சியில் ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள பணியினையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சிக்கல் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவதற்கான பணி, ரூ.5.64 இலட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி, மற்றும் வீரம்மாள் நகரில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், சிக்கல் ஊராட்சியில் 15வது நிதி குழு மானியத்தின் சார்பில் ரூ.3.20 இலட்சம் மதிப்பீட்டில் குப்பை பிரிக்கும் கொட்டகை அமைக்கும் பணி மற்றும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணியினையும், ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ரேவதி, உதவிசெயற்பொறியாளர்கள் ராஜாராமன், மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

