நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா
வேதாரணியம் மே 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை யில் ருக்மணி வரதராஜன் திருமண மண்டபத்தில்
பாரதி ஜனதா
கட்சியின் நாகை மாவட்ட
தலைவராக பொறுப்பேற்க்கும்
S.கார்த்திகேயன் அவர்களுக்கு
பாராட்டு விழா நடைபெற்றது
இந்த பாராட்டு விழாவிற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க வரதராஜன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரையாற்றினார்.மேற்படி கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமஎழிலரசன்,மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன்
வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.




