வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
நாகை மே 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்;.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கத்தரிப்புலம், செட்டிபுலம், ஆயக்காரன்புலம் 3, 4, தகட்டூர் ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், நாகக்குடையான் முதல் கத்தரிப்புலம் ஊராட்சியில் தென்னம்புலம், கருப்பன்காடு பகுதி வரை பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.596.43 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், தகட்டூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், கத்தரிப்புலம், தகட்டூர் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினையும், செட்டிப்புலம், ஆயக்காரன்புலம்-4 ஊராட்சிகளில் தலா ரூ.1.76 இலட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் புனரமைக்கும் பணியினையும், ஆயக்காரன்புலம்-4ஆம் சேத்தியில் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அப்பணியினை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா, கொய்யாதாய்ச் செடி நடவுவயல், தென்னை விதைப்பு வயல், முந்திரி ஒட்டுக்கன்றுகள், முருங்கை கன்றுகள் போன்றவைகள் உற்பத்தி செய்வதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.


இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் ஜான்பிரிட்டோ, இளநிலை பொறியாளர் அருண்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், பணிமேற்பார்வையாளர் வேல்கண்ணன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

