தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
நாகை மே 13
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்;.
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமானப் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் வானவன்மகாதேவி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட பணியினையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சமுதாய கழிப்பிடம் கட்டிடம் கட்டும் பணியினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாலுவேதபதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்று உற்பத்தி செய்தல் பணியினையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நாலுவேதபதி ஊராட்சியில் சமுதாய பண்ணைக்குட்டை அமைக்கப்பட்ட பணிகளையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவை குறித்தும், கள்ளிமேடு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியினையும், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின் போது தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ, ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

