நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உலக செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேதாரணியம் மே 13
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உலக செவிலியர் தினம் நேற்று 12 .5 .2022 அன்று வேதாரண்யம் அரசு மருத்துவமனை , கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை , வேதாரணியம் சரவணா பல் மருத்துவமனை திருத்துறைப்பூண்டி பிரசன்னா பல் மருத்துவமனை மற்றும் வேதாரண்யத்தை சுற்றி உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் மக்கள் பொதுநல அமைப்பு நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மரக்கன்றுகளை வழங்கி அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்

