நாகை மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மே 12:
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி மற்றும் திருக்குவளை வட்டம் ஆகிய பகுதிகளில் நீர்வளத்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு முதல் சேத்தி, லிங்கத்தடி பகுதியில் இராஜன் வாய்க்கால் பிரிவு பி 1, 2, 4 ஆம் சேத்திகள் கிராமத்தில் பி2, பி2 பிரிவு சி1, வலம்புரி வாய்க்கால் பிரிவு பி1,பி2, மற்றும் காரவாய்க்கால் பிரிவு சி1 ஆகிய வாய்க்கால்களில் நீர்வளத்துறை சார்பில் 14.40 கி.மீ தூரம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், திருக்குவளை வட்டம் மணக்குடி, திருவிடைமருதூர் கிராமத்தில் மணக்குடி வாய்க்கால், வடிகால், சுக்கான்தேத்தி, வடகட்டளை வாய்க்கால், வடிகால், கருவபிள்ளையாண்டி போன்ற வாய்க்கால்களில் நீர்வளத்துறை சார்பில் 14.30 கி.மீ தூரம் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், திருக்குவளை வட்டம், ஆய்மூர், வடுகூர், புத்தூர் கிராமங்களில் மல்லியன் வாய்க்கால் வடிகால், பகடமங்கலம், குபேரியன், கோர, பெருமழை புது வாய்க்கால் பிரிவு பி1, பி4, பி6 போன்ற வாய்க்கால்களில் நீர்வளத்துறை சார்பில் 12.00 கி.மீ தூரம் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் தமிழரசன், பகுதி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

