நாகை மாவட்டத்தில் கீழ்வேளுர், திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
நாகை மே 10
நாகை மாவட்டம் கீழ்வேளுர், திருமருகல், திட்டச்சேரி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொண்டார்.
நாகை மாவட்டம் நீர்வளத் துறை சார்பில் கீழ்வேளுர் வட்டம் ஒக்கூர், கடம்பங்குடி கிராமங்களில் ஒக்கூர், கடம்பங்குடி, துண்டம், விளம்பாக்கம் ஆகிய பாசன வாய்க்கால்களில் 19 கி.மீ தூரம் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், மேலபூதனூர் ஊராட்சியில் மேலபூதனூர், பெருநாட்டான்தோப்பு,மல்டேரி, நத்தம், பெரியகண்ணமங்கலம் பிரிவு 1 ஆகிய பாசன வாய்க்கால்களில் 12,500 மீ தூரம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மானாம்பேட்டை வாய்க்கால் 9கி.மீ தூரம் ரூ.7.29 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும், திட்டச்சேரி பேரூராட்சியில் கிளிவாய்க்காலில் 12கி.மீ தூரம் ரூ.9.5 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் கீழ்வேளுர் வட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், தேவூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் கிராம சந்தை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும், இரட்டை மதகடி கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் இருப்பு குறித்தும், காக்கழனி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமானப் பணிகளையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செயல்படும் வட்ட செயல்முறை கிடங்கில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் இருப்பினை ஆய்வு செய்தார் மேலும், கீழ்வேளுர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதையும், தேவூர் ஊராட்சியில் உள்ள நூலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, உதவி பொறியாளர்கள் சாக்ரட்டீஸ், செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய்மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

