வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் மே 10
பழைய ஓய்வு ஊதியம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சரின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வேதாரண்யத்தில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் V. அன்பழகன் தலைமை ஏற்றிட வரவேற்புரை எஸ் எஸ் இளங்கோவன் ஆற்றிட விளக்க உரை எம் ஜெகநாதன், எம் மணிமேகலை, செந்தமிழ்ச்செல்வி, எழில்மாறன் ஆற்றிட நன்றி உரை டி ஜெயம் கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியம் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

