வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் மே 09
பழைய ஓய்வு ஊதியம் சாத்தியமில்லை என்று சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சரின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேதாரண்யத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில்,நகராட்சி அலுவலக வாயில்,கோட்டாட்சியர் அலுவலக வாயில் ஆகியவற்றில் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வட்டச் செயலாளர் வி எஸ் ராமமூர்த்தி தலைமையேற்று நடத்தி வைத்தார் . தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வேல் கண்ணன்,
சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார்,
சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் துர்க்காம்பிகை மற்றும் ஏராளமான அரசு ஊழியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

