தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாகை மே 9
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலைவர்கள் வேதாரண்யம் ராமமூர்த்தி, தலைஞாயிறு மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் அரங்கநாதன், ஞானசம்பந்தம் ஆகியோர் குறைந்த பட்ச ஓய்வூதியம் 7850 வழங்குதல், அகவிலைப்படி, மருத்துவபடி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரை ஆற்றினர். மாவட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலாளர் வி.எஸ்.ராமமூர்த்தி, வட்ட பொருளாளா் போசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் ஏராளமான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநில துணைத் தலைவர் மதிவாணன் நிறைவுரையாற்றினார். சங்க பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

