வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு திருமணக்கோல காட்சி அருளும் ஜதீக விழா.
வேதாரணியம் மே 8
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு சிவபெருமான் பார்வதி திருமணக்கோல காட்சி அருளும் ஜதீக விழா நடைபெற்றது.


சிவபெருமான் பார்வதி திருமண திருமணக்கோல காட்சி விழாவையொட்டி கோயில் சன்னதியில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க. சுவாமி சன்னதி முன்பு திருமால் முன்னிலையில் சிவபெருமான் பார்வதி திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சியளித்தார். சுவாமிக்கு தீபாராதனை காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின் அனைவருக்கும் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது.இந்த சிறப்பான நிகழ்வில் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

