நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் பணிகளை நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் ஆய்வு
நாகை மே 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறுமற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 2022-23ஆம் ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்ள ரூ.71.50 கோடி மதிப்பீட்டில் 549 பணிகள் 4294.94 கி.மீ நீளத்திற்கு ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வார நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2022-2023ஆம் ஆண்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ஆறுகள், கால்வாய்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மூலம் கோரிக்கைகள் பெறப்பட்டதின் அடிப்படையிலும், நீர்ப்பாசனதுறையின் அலுவலர்கள் மூலமாக கண்டறிந்தும் இவ்வட்ட கட்டுப்பாட்டிலுள்ள கோட்டங்களின் மூலம் 369 பணிகள், 3753.08 கி.மீ நீளத்திற்கு ரூ.4540.04 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் வட்டம் பாப்பாகோவில் மற்றும் நரியங்குடி கிராமங்களில் உள்ள வடிகால்கள் 5.00 கி.மீ தூரம் மற்றும் புத்தூர் வடிகால் 1.00 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகள் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதால் வடிகாலை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 342 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
கீழ்வேளுர் வட்டம் வன்னியடி மற்றும் கிராமத்துமேடு கிராமங்களில் மரவனார் வடிகால் 4.00 கி.மீ முதல் 6.00 கி.மீ வரை, கிராமத்துமேடு வடிகால் 3.00 கி.மீதூரம், சோழவித்யாபுரம் வடிகால் 3.00 கி.மீ தூரம், குறிச்சிவடிகால் 1.00 கி.மீ தூரம், அய்யனார்கோவில் வடிகால் மற்றும் ஆய்மழை வடிகால் 3.00 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகள் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதன் மூலம் தேவூர், இருக்கை, வடுகச்சேரி, செம்பியன்மாதேவி, ஆலங்குடி, ஒரத்தூர், கிராமத்துமேடு, செட்டிச்சேரி, கருவேலங்கடை, வடவூர், சின்னதும்பூர், பெரியதும்பூர், சோழவித்யாபுரம், தன்னிலப்பாடி, மரைக்காயர்கட்டளை, வடவோடி, பாலக்குறிச்சி, கச்சரக்கோட்டகம் ஆகிய கிராமங்கள் பாசனம் மற்றும் வடிகால் வசதி பெறுகின்றன.
அதனைத் தொடர்ந்து திருக்குவளை வட்டம் மணக்குடி, திருவிடைமருதூர் கிராமத்தில் மணக்குடி வாய்க்கால் எல்.எஸ் 1.400 கி.மீ தூரம், மணக்குடிவடிகால் எல்.எஸ் 1.500 கி.மீ தூரம், சுக்கான்சேத்தி வாய்க்கால் எல்.எஸ் 3.000 கி.மீ தூரம், வடகட்டளை வாய்க்கால் எல்.எஸ் 2.600 கி.மீ தூரம், வடகட்டளைவடிகால் எல்.எஸ் 1,800 கி.மீ தூரம், கருவபிள்ளையாண்டி வாய்க்கால் எல்.எஸ் 4.000 கி.மீ தூரம் மண்வாரி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் ரூ.9.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதால் வடிகாலை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 829 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
மேலும், வேதாரண்யம் வட்டம் காடந்தேத்தி, திருமாளம் கிராமத்தில் காடந்தேத்தி கோட்டகம் வாய்க்கால் பிரிவு பி1 வாய்க்கால் எல்.எஸ் 1.300 கி.மீ தூரம், திருமாளம் வாய்க்கால் பிரிவு பி2 வாய்க்கால் எல்.எஸ் 2.800 கி.மீ தூரம்,ராமதேவன் வாய்க்கால் பிரிவு பி1வாய்க்கால் எல்.எஸ் 2.900 கி.மீ தூரம் மண்வாரி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டில்; மண்வாரி இயந்திரம் மூலம் காட்டாமனைக்குசெடிகள் மற்றும் மண் திட்டுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால் வடிகாலை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 384 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் தூர்வார 30 பணிகள் 329.90 கி.மீ நீளத்திற்கு ரூ.346.57 இலட்சம் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை 20 பணிகள் துவங்கப்பட்டு 42.00 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 பணிகள் மே இரண்டாம் வாரத்தில் துவங்கப்பட்டு மே இறுதி வாரத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் அருண்ராய் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் வட்டம் திருப்புகலூர் கிராமத்தில் உள்ள பாசன வாய்க்கால் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகவேல், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் தனபால், உதவிசெயற்பொறியாளர் பாண்டியன், உதவிபொறியாளர்கள் கமலகண்ணன், சாக்ரட்டீஸ், செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்

