வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வேதாரணியம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
வேதாரணியம் மே 3
இன்று தோப்புத்துறையில் ஈகைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜாமியா பெரிய பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர்.
சின்னப் பள்ளிவாசல், மலாக்கா பள்ளிவாசல், லெப்பை அப்பா பள்ளிவாசல் ஆகியவற்றில் பெண்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழுதனர்.
கொரணr காரனமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈதுல் பித்ர் தொழுகைகள் பள்ளிவாசல்களில் நடைபெறாத நிலையில், இவ்வாண்டு மக்கள் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கூடி ஒருவரையொருவர் ஆரத் தழுவிய உற்சாகமான சூழல் நிலவியது.
முஸ்லிம் மாணவர் முன்னணி சார்பில் பெருநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. முதல் மரக்கன்றை மு.தமிமுன் அன்சாரி Ex, MLA அவர்கள் ஊன்றினார்.
பல இளைஞர்கள் அவரவர் தெருவில் கூடி நின்று குருப் போட்டோ எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
பலர் தங்கள் சதோதர சமுதாய நண்பர்களின் வீடுகளுக்கு விருந்துணவுகளை அனுப்பி வைப்பதும், அவர்கள் வருகை தந்து வாழ்த்து சொல்லும் நிகழ்வுகளும் வழக்கம் போல நிகழ்ந்தது.
மாலை 5 மணிக்கு படே சாஹிப் மைதானத்தில் பெருநாள் சந்தை இருந்ததால் பெண்கள் கூட்டம் அங்கும் அலைமோதியது.
வெயில் கடுமை காரணமாக மாலை 7 மணிக்கு பிறகே மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

