உலக ஆஸ்துமா தினம் – தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது!!
தூத்துக்குடி, மே,4
உலக ஆஸ்துமா தினம் – நேற்று கடைபிடிக்கப்பட்டது இதனையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma – GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.
ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட துறைத்தலைவர் பேசியதாவது::
மூச்சு இளைப்பு நோய் வீசிங்
இந்த நோய் குறித்து துறை தலைவர் பேசினார்.
ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே மருத்துவரிடம் காண்பித்தால் அவர்கள் நெபுலைசர் மூலமாக அந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று எடுத்துக் கூறினார்.
மாத்திரைகளும், ஊசி மருந்துகளும் அதற்கான சுவாச பயிற்சி மற்றும் சுவாச இயன் முறை சிகிச்சைகள் உண்டு.
மேலும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
புகைபிடித்தல் ரசாயன புகை களுக்கு எக்போஸ் ஆகுதல் மற்றும் தூசி மற்றும் பணியின் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போதும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பரம்பரையாக அலர்ஜி ( ஒவ்வாமை) காரணமாக ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது
நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் திருமதி சங்கமித்ரா அவர்கள் முதல்வர் திரு டி நேரு அவர்கள் உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே சைலஸ் ஜெபமணி அவர்கள் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் செவிலியர் மற்றும் சுவாச சிகிச்சை பிரிவு மாணவர்கள் பங்கேற்றார்கள்.

