• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!! அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

policeseithitv by policeseithitv
May 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!!     அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய வசூல் விவசாயிகள் புகார்!!

 

அதிரடி ஆய்வுகள் மேற்கொண்ட உணவு அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்!!

 

காஞ்சிபுரம், மே, 3

 

காஞ்சிபுரம் மாவட்டம்

சந்தவேலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ.120 கட்டாய கட்டணம் வசூலித்து அடாவடி செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சந்தவேலூர் ஊராட்சியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது இங்கு சந்தவேலூர், எச்சூர், குண்ணம், திருமங்கலம் , பாப்பாங்குழி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்களை இந்த கொள்முதல் நிலையத்தில் வழங்கி வருகின்றனர்.

 

இந்நிலையில் சந்தவேலூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வழங்கும் மூட்டைக்கு அதிகாரிகள் 120 ரூபாய் கட்டாய கட்டணம் வசூல் செய்கின்றனர். என்று விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக அரசு விவசாயிகள் வழங்கும் நெல் மூட்டைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.

ஆனால் சந்தவேலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு அறிவிப்பையும் மதிக்காமல் விவசாயிகளிடமிருந்து கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுகிறது. என்ற குற்றச்சாட்டு நீண்ட நாளாக எழுந்து வருகிறது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா கூடுதல் கட்டணம் வசூலித்தால் கூட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் சந்தவேலூரில் எதையும் மதிக்காமல் அரசுக்கும் பயப்படாமல் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு கட்டாயமாக 120 ரூபாய் வசூல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள், தங்கள் மனக் குமுறல்களை புகாராக உணவுத்துறை அமைச்சர் மற்றும்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அமைச்சர், மாவட்ட ஆட்சியர்

இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தவேலூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று(02-05-2022) திங்கட்கிழமை

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகாவேரிபாக்கம்,ஜெ.ஜெ.நகர்,கீழம்பி,தாமல்,விஷார் உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடைகள்,கிடங்குகள்,நெல் கொள்முதல் நிலையங்களை மாண்புமிகு தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கிரபாணி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

அதுபோல் நியாயவிலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர். எம்எல்ஏ

,நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாவட்ட ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழகத்தினர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Post

வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

Next Post
வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In