• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது. கனிமொழி எம்பி தகவல்!!!

policeseithitv by policeseithitv
May 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது.  கனிமொழி எம்பி தகவல்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது.

கனிமொழி எம்பி தகவல்!!!

 

தூத்துக்குடி, மே ,2.

 

 

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் 12 வது ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மே,17 முதல் 28 தேதி வரை நடைபெறுகிறது என கீதா ஓட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.

தெரிவித்தார்.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளியில் மே மாதம் 17 முதல் 28ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த போட்டியில் மொத்தம் 30 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் 540 வீரர்கள் பங்குபெறும் 50 போட்டிகள் நடக்க உள்ளன. இப் போட்டியில் இருந்து இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் போட்டிகள் காலை ஆறு முப்பது மணி முதல் மாலை 8 மணி வரை நடைபெறும் இப்போட்டிக்கான தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக உத்தரபிரதேசம் மற்றும் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது கடந்த ஆண்டு மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்ற காரணத்தினால் ஹாக்கி இந்தியா அமைப்பு இந்த ஆண்டும் கோவில்பட்டியில் இப்போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இருந்து தமிழக அணியில் இருந்து 5 வீரர்கள் இந்திய அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர் மேலும் இந்த ஐந்து வீரர்களும் கோவில்பட்டி சார்ந்தவர் என்று கூறப்படுகிறது.

 

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தவுள்ள 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி குழு சேர்மனாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும், துணை சேர்மனாக மாண்புமிகு தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களும், மாண்புமிகு மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களும், மற்றும் கே .ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே ஆர் அருணாச்சலம் அவர்களும், போட்டிகளில் அமைப்புச் செயலாளராக ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாட்டின் தலைவர் சேகர் மனோகரன் அவர்களும் இணைந்து இப்போட்டியை சிறப்பாக நடத்த உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஹாக்கிங் யூனிட் ஆப் தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் செந்தில் ராஜ்குமார், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் ஒலிம்பியன் திருமாவளவன், துணைத்தலைவர் சங்கிலி காளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் குரு சித்திரை சண்முக பாரதி அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ராமஜெயம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, போல் பேட்டி பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் ஆல்பர்ட், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post

மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு! காஞ்சிபுரத்தில் மாபெரும் இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்

Next Post

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Post
தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடியில் மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In