மே 1 உழைப்பாளர்கள்
தினத்தை முன்னிட்டு! காஞ்சிபுரத்தில் மாபெரும் இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் !
காஞ்சிபுரம் ,மே, 2
மே 1 உழைப்பாளர்கள்
தினத்தை முன்னிட்டு, பிரிமியர் கிளினிக்கல் லேப், காஞ்சி இன்பினிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ அம்பிகா கிளினிக் , அம்பிகா மெடிக்கல் இணைந்து நடத்தும் மாபெரும் மாபெரும் இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நேற்று வந்தவாசி சாலை, புஞ்சையரசந்தாங் கல் அபூர்வா பேக்கரி எதிரிலுள்ள
ஸ்ரீ அம்பிகா மெடிக்கல் வைத்து நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மதியம்
1மணி வரை நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக பொதுநலம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர் முகமது அலி, பொது நல மருத்துவர் டாக்டர் ஸ்ரீநாத், மகப்பேறு நல மருத்துவர் டாக்டர் ரிப்யா நஸ்ரின், பொதுநல மருத்துவர் டாக்டர் சீனிவாசன், ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ரோட்டரி சங்க நிர்வாகிகள்
உதவி ஆளுநர் முரளி கிருஷ்ணன், தலைவர், ராஜேஷ், செயலாளர் லோகேஸ்வரன், மெடிக்கல் எஸ். சுரேஷ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைவர் வில்வராஜ், முன்னாள் செயலாளர் பாலமுருகன், பாபு, சுரேஷ், ஞானசேகர் உட்பட ரோட்டரி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில் சிறப்பு சலுகையாக
சர்க்கரை நோய்க்கான இலவச பரிசோதனை சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்ட பிறகு ஆகிய இரண்டு நேரம் எடுக்கப்பட்டது. தைராய்டு, கொலஸ்ட்ரால், இசிசி போன்ற பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. இந்த மாபெரும் சிறப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வந்தவாசி சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி மெடிக்கல் சுரேஷ்

