உப்பு சத்யாகிரக நினைவு பாதயாத்திரை நிறைவில் வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம்.
வேதாரணியம் ஏப்ரல் 30
இந்திய சுதந்திரப் போராட்டவெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம். 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாத்மா காந்தி தலைமையில் தண்டியிலும் ,மூதறிஞர் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் கடந்த 13ஆம் தேதி திருச்சியிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை குழுவினர் வேதாரணியம் வந்தனர். அதன் நிறைவாக நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் 29.04.2022 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார் .



கூட்டத்தில்குருகுலம் அறக்கட்டளை கலைமணி வேதரத்தினம், பொன். கிருஷ்ணமூர்த்தி,தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசும்போது ஹிந்தி ஆட்சி மொழியாக இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வரலாற்று சிறப்புமிக்க செம்மொழியாக திகழ்ந்தது தமிழ் மொழிதான் . தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகியன செம்மொழியாக உள்ளது. ஆனால் இந்தி புதியமொழி என்றும் ,உப்பு சத்தியாகிரக போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றும் பேசினார். இந்நிகழ்வில் விஷ்ணு பிரசாத் எம்பி,சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களின் பேரன் கேடிலியப்பன், காங்கிரஸ் நகர தலைவர் வைரவன்,துணைத் தலைவர் சாரட் என்கிற அர்ஜுனன்,ரபீக்,அப்துல் உசேன்,மூர்த்தி, பஞ்சநதிக்குளம் பஞ்சாயத்து தலைவர் சத்யகலா செல்வராணி,ஐஎன்டியூசி உப்பு தொழிலாளர் சங்க துணைத் தலைவர் தங்கமணி பொருளாளர் தாயுமானவன்,ஆப்கான்,விக்னேஸ்வரன்உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினர் மற்றும்
ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்குகொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

