• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

policeseithitv by policeseithitv
April 26, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
வழக்கறிஞர்கள்  சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!   தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வழக்கறிஞர்கள்

சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

 

தூத்துக்குடி,

ஏப்ரல், 27.

 

 

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்பது மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நாமக்கல் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலாவதாக சென்னையில் வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்து, கொரோனாவுக்கு பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் ரூபாய் சேமநல நிதியை வழங்கினார்.

ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பொறுப்புக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்கிறார் எனவும் தான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டை அடுத்த மாதம் பூர்த்தி செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார் முதல்வரான பின் முதல் முறையாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் நீதி நெறிமுறையை சட்டத்தின் ஆட்சியை பின்பற்றும் ஆட்சியை வழங்கிக் கொண்டிருப்பதாக பெருமையோடு தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சட்டத்தின் குரலாக மட்டுமல்லாமல் மக்களின் குரலாகவும் விளங்குகிறார் எனத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆண்டு 64 கீழமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டது, வணிக நீதிமன்றங்கள் துவங்க உத்தரவிடப்பட்டது, திருவண்ணாமலை, திருவாரூரில் சார்பு நீதிமன்றங்கள் துவங்கியது, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட 20.24 கோடி ரூபாய் ஒதுக்கியது, 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு ஒதுக்கியது குறித்தும் பட்டியலிட்டார்

மேலும், காரைக்குடியில் புதிய சட்டக் கல்லுரி துவங்க இருப்பதாகவும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும் எனவும் அப்போது அவர் உறுதியளி;த்தார் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை ஏழு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

தென்மாநில மக்கள் நலனுக்கான நீண்ட கால கோரிக்கையான உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் தனது இந்த கோரிக்கைகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்ற நீதிபதிகள் உதவியாக நிற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார் அதன்பிறகு, நீதிமன்றங்கள் அமைப்பதற்கு நிலத்தை வழங்குவது தொடர்பான உத்தரவை முதலமைச்சர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கினார்

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 467 வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு சேமநல நிதியாக 32.6 கோடி வழங்கப்படுவதாக குறிப்பிட்டார் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நீதி பரிபாலனத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

இதனையடுத்து தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளரும் மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன்தாஸ் சாமுவேல் தலைமையில் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணி, பூங்குமார், செங்குட்டுவன், எல்லம்மாள், மாலாதேவி, ஆழ்வார் கார்த்திகேயன், திமுக மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், மற்றும் வக்கீல்கள் சங்கர், பாலசுப்பிரமணியன், குபேர் இளம்பரிதி, திலக், மகேந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வேதாரண்யத்தில் கள்ளச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி 

Next Post

நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

Next Post
நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In