அரியவகை குருதியை 50 முறைக்கு மேல் தானம் செய்த
சமூக ஆர்வலர்
ஷேக் சதக்கத்துல்லாஹ்:
பாராட்டிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!
சென்னை,
ஏப்ரல்,27
சென்னை மண்ணடியில் வசித்து வருபவர்
சமூக ஆர்வலர்
ஷேக் சதக்கத்துல்லாஹ்,
இவர் ஏழை எளிய மக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டு பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.
மனிதநேயமிக்க இவரது சொந்த ஊர்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் ஊரைச் சார்ந்தவர். சமூக சேவை ஆற்றி வரும் இவர் ரத்ததானம் செய்து பல உயிர்களை காப்பாற்றிய பங்கு உண்டு உதாரணத்திற்கு
ஏ பி நெகடிவ் ( AB negative ) என்ற அரியவகை குருதி அவசர காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் கிடைப்பது அரிது
ஆனால்
குருதிக் கொடையாளரும் சமூக ஆர்வலருமான ஷேக் சதக்கத்துல்லாஹ்
என்பவர் இந்த அரியவகை குருதியை சுமார்
50 முறைக்கு மேல் குருதி தானம் தந்துள்ளார் .
மற்றும் இவரைப் போன்று
அவரது மகன் செல்வன் ஷேக் சம்சுத்தீன் குறுகிய காலத்திலேயே
சுமார் 10 முறைக்கு மேல் குருதி தானம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர்களின் இந்த மனிதநேய செயல்களைப் பாராட்டி கடந்த 22.04.2022 அன்று சென்னை கோட்டையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் சமூக ஆர்வலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தங்களது குருதிக்கொடை நற்செயலுக்கு முதலமைச்சரின் நல்வாழ்த்துக்களைப்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சார்ந்த ஷேக் சதக்கத்துல்லாஹ், மற்றும் அவரது மகன் ஷேக் சம்சுத்தீன் ஆகியோருக்கு தமிழகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிகிறது. மேலும்
இவரின் இணையதள முகவரி www.sadaqathullah.com/blood.html ஆகும். இதன் மூலமாகவும் ரத்ததான நன்கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

