காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன் தந்தை பக்கிரிசாமி காலமானார்!;
செய்தித்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் நேரில் அஞ்சலி!!
சென்னை,
ஏப்ரல்,26
தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் பிஆர்ஓ வாக பணியாற்றி வருபவர் ப. கணேசன். இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வருகிறார் .
சென்னை ஆவடி, சேர்க்காடு, தேவராஜன் நகர் மேட்டு தெருவில் வசித்து வந்த, காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .
ப.கணேசன் அவர்களின் தகப்பனார் .என்.
பக்கிரிசாமி
(வயது 80) அவர்கள் 24-4-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி அளவில் இயற்கை எய்தினார். இவரது நல்லடக்கம் சென்னை ஆவடியில் நடைபெற்றது. பக்கிரிசாமி மறைவு முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அதுபோல் செய்தியாளர்கள் புகைப்பட கலைஞர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். என்பது குறிப்பிடத்தக்கது.

