முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கிய மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி .
வேதாரணியம் ஏப்ரல் 23
புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். அதில் நேற்று நோன்பு துறப்பு முடிந்து நோன்பு கஞ்சியுடன் ஈகா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் வேதாரண்யம் கைத்தடி முதியோர் இல்லத்திற்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முதியோர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கினார். தீபாவளி பொங்கல் பண்டிகையின்போது உங்களுடன் தான் கொண்டாடுவேன் என முதியோர்களிடம் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, சமூக ஆர்வலர்கள் முகமது ஷாபி, பி.எஸ். ரகமத்துல்லா, முபின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.வேதாரண்யம் கைத்தடி முதியோர் இல்லத்திற்கு வருகை தந்து பாராட்டிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவருடன் வருகை தந்த அனைவருக்கும் ஈகா அறக்கட்டளை தலைவர் மோகன் நன்றி தெரிவித்தார்.


செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

