வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜை – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
நாகை ஏப் 21
நாகப்பட்டினம் நகராட்சி பப்ளிக் ஆபிஸ் ரோடு பகுதியில் மூலதன மான்ய நிதி ரூ.12 கோடி மதிப்பீட்டில் வடிகால் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் கலந்துக்கொண்டார்.
பின்னர் மாவட்டஆட்சியர் தெரிவித்ததாவது:
நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் மழைகாலங்களில் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அடைபடாமல் தேங்கும் நீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி வடிகால்களை சீரமைப்பு செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 5 கி.மீ தொலைவிற்கு ரூ.12 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு பணி துவங்கப்படுகிறது.
இந்த வடிகால் சீரமைப்பின் மூலம் மழை காலங்களில் மழைநீர் எளிதில் வெளியேற்றி பொதுமக்களின் இன்னல்கள் குறைக்கும் வகையில் அமையும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன், உதவி பொறியாளர் அருண்குமார், நகர்மன்றஉறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளார்கள்.

செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

