வேதாரண்யத்தில் 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது .
வேதாரணியம் ஏப்ரல் 21
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல்மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கடைத்தெரு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது இரண்டு வாகனங்களில் கடத்திவரப்பட்ட 36 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 147 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் சம்பந்தப்பட்ட சரபோஜி ராஜன், இளமாறன் ,பரமன், போத்துராஜா ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இலங்கைக்கு கடத்துவதற்காக இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட 147 கிலோ கஞ்சாவை நாகை காவல் கண்காணிப்பாளர ஜவகர் பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், ஆய்வாளர் சுப்ரியா , உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.





செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

