வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் – மூவர் கைது .
வேதாரணியம் ஏப்ரல் 21
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா, உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 6 மணிக்கு வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கடைத்தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்றுபேரை காவல் துறையினர் சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ கீட்டமைன் எனும் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாயாகும். கீட்டமைன் என்பது மருத்துவமனைகளில் அறுவை அரங்கில் நோயாளிகளை மயக்கமடையச் செய்து அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் மயக்க மருந்துகளில் கீட்டைமனும் ஒன்று. இதை சிலர் போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. கீட்டமைன் போதை பொருளை கடத்திய சிவகுமார், திராவிடமணி, செல்வராசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பார்வையிட்டார். காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் ,ஆய்வாளர் சுப்ரியா உதவி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.



செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

