பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஏப்ரல் 20
நாகை மாவட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த கோரியும், சத்துணவு அங்கன்வாடி, கிராமப்புற நூலகங்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

