• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் அதிரடி திருப்பம்!! பிஷப் தேவசகாயம்  சஸ்பென்ட் !!   பிரதம பேராயர் அதிரடி நடவடிக்கை!! உற்சாகத்தில் திருமண்டல மக்கள்

policeseithitv by policeseithitv
April 20, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் அதிரடி திருப்பம்!!     பிஷப்  தேவசகாயம்   சஸ்பென்ட் !!       பிரதம பேராயர் அதிரடி நடவடிக்கை!!     உற்சாகத்தில் திருமண்டல மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்தில் அதிரடி திருப்பம்!!

பிஷப்

தேவசகாயம்

சஸ்பென்ட் !!

பிரதம பேராயர் அதிரடி நடவடிக்கை!!

உற்சாகத்தில் திருமண்டல மக்கள்

———

தென்னிந்திய திருச்சபையின் அங்கமான தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பேராயராக இருந்து வந்த தேவசகாயம் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிவடைந்தது. திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் செயலாளராக டி .எஸ். எப். நிகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளராக மோகன் அருமைநாயகம் , உப தலைவராக குருவானவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலாளராக குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்ட்றாக் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று எஸ். டி. கே .ராஜன் அணியினரை தோற்கடித்தனர் .வெற்றி பெற்ற டி.எஸ்.எப் அணியினரை அப்போது பேராயராக இருந்த தேவசகாயம், வெற்றி பெற்றதாக அறிவித்து அவர்கள் அனைவரையும் இருக்கைகளில் அமர வைத்து ஜெபம் செய்து ஆசி வழங்கினார்.

 

 

பின்பு மறுநாளே எஸ். டி .கே ராஜன் அணியினருக்கு ஆதரவாக தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் பிரதம பேராயரால் நியமிக்கப்பட்ட தேர்தல் குழு தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி இவரே வெற்றி பெற்றதாக அறிவித்த. டி.எஸ்.எப் அணியினர் வெற்றி செல்லாது என அறிவித்து மீண்டும் மறு தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதற்கிடையில் பிரதம பேராயரிடம்ரிடம் டி .எஸ். எப் அணியினர் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து 22 .8. 2021 மற்றும் 28. 8. 2021 ஆகிய தேதிகளில் பிரதம பேராயர் அலுவலகம் டி. எஸ். எப் அணியினர் தான் வெற்றி பெற்றனர் என்றும் அவர்கள்தான் நிர்வாகஸ்தர்கள் என்றும் கூறி கடிதம் அனுப்பியதோடு , பேராயர் தேவசகாயத்தை எச்சரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தோடு சேர்ந்து ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர் .

தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள பிரதம பேராயரின் உத்தரவிற்கு கட்டுப்படுவது போல் செயல்பட்ட பேராயர் தேவசகாயம் டி .எஸ் .எப் அணியினரோடு சேர்ந்தார் . பின்பு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போன்று மீண்டும் எஸ். டி .கே அணியினரோடு சேர்ந்து கொண்டு நிர்வாகத்தை செயல்பட விடாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார். அதன்பின்பு எஸ் .டி .கே ராஜன் அணியைச் சேர்ந்த கடாட்சபுரம் சுபாஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறு தேர்தல் நடத்த கேட்டு வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக பிரதம பேராயரும், இரண்டாவது பிரதிவாதியாக பிஷப் தேவசகாயமும் சேர்க்கப்படுகிறார்கள். பிரதிவாதியாக உள்ள பிஷப் தேவசகாயம் வாதிக்கு எதிராக வாக்குமூலம் தாக்கல் செய்யாமல் , பிஷப் தேவசகாயம் தாக்கல் செய்த அபிடவிட்டில் பிரதம பேராயர் தன்னை மிரட்டுவதாகவும் ,

பிஷப் கவுன்சில் தனக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும் கூறியதோடு பிரதம பேராயரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்று கூறப்படுகிறது , இதையெல்லாம் கூர்ந்து கவனித்த பிரதம பேராயர் அலுவலகம் அவருக்கு மீண்டும் பல சந்தர்ப்பங்களை வழங்கியும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட. நிர்வாகிகளோடு இணைந்து ஒத்துழைக்க மறுத்ததால் திரு மண்டலத்தின் நிலை கேள்விக்குறியாகி விடும் என்ற நிலையில் தற்போது பிரதம பேராயர் அதிரடி நடவடிக்கையாக தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் தேவ சகாயத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு முன்பாக தென்னிந்திய திருச்சபை விதிகளின் படி சினாட் கோர்ட் நேற்று 20.4 . 2022 அன்று கூடியது. அதில் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம், கரீம்நகர் பேராயர் ரூபன் மார்க் , திருச்சி பிஷப் சந்திரசேகரன் ,கிழக்கு கேரளா பிஷப் பிரான்சிஸ், கொல்லம் பிஷப் ஓமன் ஜார்ஜ், மலபார் பிஷப் ராய்ஸ் மனோஜ், மதுரை- ராம்நாட் திருமண்டல குருவானவர் டேவிட் ஜெபராஜ், கர்நாடகா குருவானவர் சாமுவேல் கால்வின் ,லே பிரதிநிதிகளாக தோரணக்கல் சுமலதா, கர்நாடகா வினோத் தாசன், ஆகியோர் அடங்கிய சினாட் கோர்ட் கூடி ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவ சகாயத்தை சஸ்பெண்ட் செய்வது என முடிவு செய்தனர். மேற்படி சஸ்பென்ட் செய்யப்பட்ட உத்தரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியோடு இணைந்து செயல்படாமல், நிர்வாகம் செயல் பட விடாமல் தடுத்து சீர்குலைவை ஏற்படுத்தியது ,மேலும் தென்னிந்திய திருச்சபையின் அதிகாரமிக்க அமைப்பாகவும்,

24 திரு மண்டலங்களுக்கு தலைமை அலுவலகமாகவும் செயல்படும் சினாட் நிர்வாகத்தின் உத்தரவிற்கு கீழ்படியாமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நிர்வாகத்தை உடனே கட்டமைக்கும் வகையில் தற்போது மதுரை பேராயராக இருக்கும் ஜோசப் நியமிக்கப்படுவதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடரேட்டர் கமிஷனரி யாக நியமிக்கப்பட்ட மதுரை பேராயர் ஜோசப் புதன் கிழமை மாலை நேற்று தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல த்திற்கு வருகை தந்து அலுவலக பணிகளை பார்வையிட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார். தூத்துக்குடி வருகை தந்த மாடரேட்டர் கமிஷனரி மதுரை பேராயர் ஜோசப்பை லே செயலர் நிகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம் குமார் ராஜாசிங் உட்பட ஆயிரக்கணக்கான திருண்டல சபை மக்கள் தூத்துக்குடி புற நகர் டோல்கேட் சென்று உற்சாக வரவேற்பளித்தனர். கடந்த 6 மாத காலமாக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தில் நிலவி வந்த குழப்பமான சூழ்நிலைகளுக்கு நல்ல தீர்வு ஏற்பட்டுள்ளது என திருமண்டல கிறிஸ்தவர்களிடத்தில் பேசப்படுவது உடன் இந்த நடவடிக்கை

மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர், சி.த.செல்லப்பாண்டியன் அவர்களிடம் வாழ்த்து

Next Post

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

Next Post
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேதாரண்யத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In