*தூத்துக்குடி ரயில்வே அதிகாரியிடம் கோரிக்கை*
சமத்துவ தலைவர் திரு.எர்ணாவூர் Aநாராயணன் Ex,MLA அவர்கள் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடியிலிருந்து காலையில் சென்னைக்கு புறப்பட்டு செல்லும் குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு நேரத்தில் கோயம்புத்தூர் புறப்பட்டுச் செல்லும் கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை உடனடியாக இயக்க வலியுறுத்தியும் கொரானா காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்கள் ஆக மாற்றப்பட்டு ரயில்களில் வழங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சலுகை ஊனமுற்றோர் சலுகை மகளிருக்கான ஒதுக்கீடு சலுகைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது ஆகவே சிறப்பு ரயில்களை மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆக மாற்றி பறிக்கப்பட்ட மேற்படி சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் ஆகிய இரண்டு அம்சக் கோரிக்கைகளை மக்கள் நலன் சார்ந்த மேற்படி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் வருகின்ற மே 5ஆம் தேதி பொதுமக்களை திரட்டி சமத்துவ மக்கள் கழகம் சார்பில் ரயில் நிலைய முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வலியுறுத்தி இன்று தூத்துக்குடி ரயில் நிலைய அதிகாரியிடம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ரவிசேகர் மனு அளித்தார்

உடன் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் விக்ரம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாநகர அவைத் தலைவர் மதியழகன் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

