• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

policeseithitv by policeseithitv
April 9, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அரசினால் பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிதியுதவி – மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நாகை ஏப் 9

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைசார்பில் இலங்கைரசினால் பாதிக்கப்பட்ட 24 விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் காசோலையினை மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் தெரிவித்தாவது:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அடிதட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும் மீனவர்கள் நலனை காக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அயல்நாட்டு கடற்படையினரால் தாக்குதல், சிறைபிடித்தல், சேதம் விளைவித்தல் போன்ற நிகழ்வுகளிலிருந்து தடுப்பதற்கு முதல் நடவடிக்கை எடுக்கும் அரசாக நம் அரசு திகழ்கிறது.

மேலும், நரிக்குறவர் மக்களை மலைவாழ் மக்கள் இனத்தில் சேர்த்து அவர்களுக்கு வீடு வழங்குதல் போன்ற அனைத்து சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அனைத்து துறைகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு மக்களுக்கு பணியாற்றி வருகிறது. மீனவர்கள் பாதிக்கக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதை தொடர்ந்து நம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் மீன் இறங்குதளம் விரிவுபடுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனதெரிவித்தார்.

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உட்பட்டு பலவித சேதங்களை அடைகின்றனர். அதனை தடுக்கும் வண்ணம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மீனவர்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் அவர்களின் துயரத்தை போக்கும் வகையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கவேண்டும் என்ற அறிவிப்பின் படி, இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தை சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலாரூ.5இலட்சம் வீதமும் 14 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.5.61 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சர் பொது நிவாரணநிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பித்து அதனை செயல்படுத்தி வருகிறார் என மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 12 விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டிலும், 1 கண்ணாடி நாரிழைப் படகு உரிமையாளருக்கு ரூ.1.50 இலட்சம் என மொத்தம் ரூ.61.50 தலா இலட்சமும், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டிலும், 1 கண்ணாடி நாரிழைப்படகு உரிமையாளருக்கு ரூ.1.50 இலட்சம் என மொத்தம் ரூ.51.50 இலட்சம் என இரண்டு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட 24 படகு உரிமையாளர்களுக்கும் மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் நிவாரண தொகைக்கான காசோலையினை மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதாஆர். இராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, ஒன்றியக் குழு தலைவர் அனுசியா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ஜேய்ஸ்ஆலிவ்ரேச்சல், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்கள் ஜெயராஜ், சண்முகம் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,

நாகை மாவட்ட செய்தியாளர்

Previous Post

தூத்துக்குடி ரயில்வே அதிகாரியிடம் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கோரிக்கை மனு *

Next Post

நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” – பினராயி விஜயன் புகழாரம்

Next Post
நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” – பினராயி விஜயன் புகழாரம்

நாட்டின் முக்கிய எதிர்பார்ப்பு மையமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்” - பினராயி விஜயன் புகழாரம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In