ஆறுகாட்டுத்துறையில் 260 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது .
வேதாரணியம் ஏப்ரல் 8
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தவுள்ளதாக, வேதாரண்யம் கடலோர காவல் நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்றிரவு அங்கு சென்ற வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் செல்வராசு தலைமையிலான காவலர்கள் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது, தென்னங்கீற்றுக் கட்டுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 09 சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டனர். சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது கஞ்சா என தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த ஆறுகாட்டுத்துறை, சுனாமி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்து, வேதாரண்யம் கடலோர காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஓட்டுநர் சுரேஷ் கஞ்சாவானது ஆறுகாட்டுத்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த பாரதி (எ) பாரதிதாசன் என்பவருக்கு சொந்தமானது என தெரிவித்ததன் பேரில் அவரையும் கைது செய்து, மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த பரமத்தி வேலூர் இலங்கை அகதி முகாமில் உள்ள காந்தரூபன் என்பவரையும், வாகனத்தையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர்.ஒன்பது சாக்கு மூட்டைகளில் இருந்த 260 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

